பெரும்பாலான பெண்கள் தற்போது ஹீல்ஸ் என்ற வகைகளில் இருக்கும் காலணிகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு ஹீல்ஸ் அணியும் பெண்களின் பாதங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அவர்களுக்குத்தான் தெரியும்.
இதன் காரணமாக கால் அதிகளவு வலிக்கும். இதனை அறிந்தாலும் பெண்கள் ஹீல்ஸ் அணிவதை தொடர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.
தென் சீனாவில் இருக்கும் ஹாபின்பா மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள ஐந்தாம் மாடிக்கு உள்ள பகுதிக்கு காதலர்கள் வருகை தந்திருந்தார். அந்த நேரத்தில் காதலி ஹீல்ஸ் வகையிலான செருப்புகள் அணிந்திருக்கவே., அவரது கால் இடறி விழுந்தார்.
அந்த நேரத்தில் அவரது காலில் சுளுக்கு ஏற்பட்டதால் அவர் வலியால் அலறித்துடித்தார்., அவரை எழுப்பி அங்குள்ள இருக்கைக்கு அழைத்து சென்ற காதலர் அமரவைக்கவே., காலில் ஹீல்ஸ் அணிந்திருந்ததால் அவருக்கு மேலும் வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த காதலர் அவர் காலில் அணிந்திருந்த செருப்பை அவருக்கு வழங்கிவிட்டு., அவருடைய ஹீல்ஸ் காலணிகளை அவர் அணிந்துகொண்டார். இந்த காட்சியை கண்ட அங்குள்ள மக்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் பரவவிடவே., இந்த காட்சியானது பெரும் வைரலாகியது.
மேலும்., பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டிய சம்பவத்தால்., காதல் ஜோடிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.