தலைமுடி உதிர்வதால் கவலையா?? இதை மட்டும் பயன்படுத்துங்கள்!!

தற்போதைய வாழ்க்கைமுறையில் ஆண்கள் உயிரை விட மேலாக கருதுவது தலைமுடி ஆகும். ஏனென்றால் தற்போது பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே தலை முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுகிறது. அதனால் ஒவொரு ஆணும் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள்.

எந்த பிரச்சனை இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் வழுக்கை தலை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது. அதனால் தான் பெண்களை விட ஆண்களே முடியில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படாமல் இருக்க சிறிதளவில் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து மூன்று வாரம் செய்து வந்தால் முடி உதிர்தல் குறையும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

மேலும் சோற்றுக் கற்றாழை சிறந்த பலன்களை தலைமுடிக்கு அளிக்கிறது. இதன் மூலம் இது முடியை மென்மையாக்கி, முடியின் வறட்சியை போக்கி முடி பளபளப்பாக்க வளரும்.

கருவேப்பிலை அரைத்து சிறிதளவு தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும். மேலும் உணவில் உள்ள கறிவேப்பிலையை சாப்பிட்டுவந்தால் தலை முடி உதிர்வதை தடுக்கலாம்.

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்றும் இதனை கூறுவார்கள். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். கரிசலாங்கன்னியை அரைத்து ஒருமாதங்களுக்கு தலையில் தேய்த்து குளித்துவந்தால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். கரிசலாங்கண்ணி சாதாரண வயல் வரப்புகளில் வளரக்கூடிய செடியாகும். இதனால் தலைமுடியின் நிறம் கருமை நிறம் அடையும்.