5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து இனி, 5 ஆம் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் மோகம் அதிகமாக உள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பிள்ளைகளை அங்கேயே சேர்க்கின்றனர். ஏழை மக்களும் தன் பிள்ளைகள் தன்னைப்போல கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவர்களும் அதே தான் செய்கின்றனர். இதனை முறியடிக்கும் விதமாக தற்போதை பள்ளிக் கல்வித்துறை கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் 4 விதமான சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி தமிழகத்திலும் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் தொடர்வார்களா அல்லது அடுத்த வகுப்பிற்கு செல்வார்களா என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.