திடுக்கிட வைக்கும் தகவல்.! ராமலிங்கத்தை எப்படி கொன்றார்களோ சிவகார்த்திகேயன் அப்பாவையும் அப்படிதான் கொன்றார்களா..?

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையும் நேர்மையாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழ்த் திரைப்பட நடிகராக உருவெடுத்தவர்.

திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர்.

பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். பலருக்கும் அவரைப்பற்றி தெரிந்திருக்குமே தவிர அவரின் குடும்பத்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவரின் தந்தையை பற்றி தெரியும். 2003 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் என்பதால் பலருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் அவரது தாயார் பெயர் ராஜி. இவர்கள் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை கண்காணிக்கும் பிரிவில் பணியில் இருந்தார்.

எனவே சிவகார்த்திகேயனின் குடும்பம் #திருச்சியில் உள்ள காவலர் குடி இருப்பில் வசித்து வந்தது அன்றுதான் அந்த சம்பவம் நடைபெற்றது கோவை குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அப்போது தங்களுக்கு தேவையானா வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்ட தாஸ் மறுத்ததோடு மட்டும்நில்லாமல் அவர்களை கவனிக்க வேண்டியவிதத்தில் கவனித்தார்.

இதனால் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பும் போது வழியிலேயே எப்படி ராமலிங்கத்தை கொன்றார்களோ அதே போல் வெட்டி வீசி சென்றுவிட்டார்கள். அன்று அனாதை ஆனதுதான் சிவகார்த்திகேயன் குடும்பம் அப்போது திருச்சியை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.