சதி செய்த சசிகலா., துணை சென்ற தம்பிதுரை!!

2019 பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி, பாஜக அதிமுக இடையேயான கூட்டணி ஓரளவு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாராளுமன்ற துணைசபா நாயகரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான தம்பிதுரை, கடுமையாக பாஜகவை குற்றம் சுமத்தியும், எப்பொழுதும் அவர்களுடன் ஒரு சுமூகமான மனநிலையுடன் இருப்பதே இல்லை.

இருப்பினும் பாஜகவுடன் அதிமுக நெருக்கமாகவே உள்ளது. கூட்டணி முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்கவிட்டாலும் அவர்களுடைய செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால், சபாநாயகர் தம்பிதுரை இவ்வாறு பாஜக வெறுப்பு மனப்பான்மையில் இயங்க என்ன காரணம் என ஆராய்ந்தால் பலரும் சசிகலாவை தான் கை நீட்டுகின்றனர். பாஜகவுடன் அதிமுக சேராமல் இருப்பது தான் அதிமுகவை அவர்கள் கைப்பற்ற எளிதான வழி என்றும்,

இருக்கட்சிகளும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதிமுகவை சசிகலா தனதாக்குவது மிகவும் சிரமமானது என்றும், இருக்கட்சிகளும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தால் அதிமுகவை ஏதும் செய்ய இயலாது எனவும் சசிகலா அஞ்சுவதாகவும் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

எனவே தான் அதிமுக , பாஜக கூட்டணிசேரமால் பிரிக்க வேண்டும் என்ற பொறுப்பை தம்பிதுரையிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது அதிமுகவில் பலருக்கும் தெரியும் என்பதனால் தான் சபாநாயகரிடம் கட்சியின் நடவடிக்கைகள் பலவற்றை அவரிடம் தெரியப்படுத்தாமலே இருப்பாராம். யாரும் அதிகம் தொடர்பு வைத்து கொள்வதும் இல்லையாம்.