குருணாகலில் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
வெல்லவ பிரதேசத்தில் மதுபோதையில் இவ்வாறான செயற்பாட்டில் அவர் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
காலையில் இருந்து கடுமையாக உழைத்த 7000 ரூபாவில் 6000 ரூபாவுக்கு மது அருந்தியுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
ரயிலில் பாய்ந்த போது கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர்.
32 வயதான சுனில் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தீவிரமான மதுபோதைக்கு அடிமையானவர் எனத் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.