இரவு படுக்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும், இதனால் உடல்நிலை சரியாக இருக்கும், நன்றாக உறக்கம் வரும் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் பால் சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என தெரிந்து கொள்வோம்.
மனித ரத்தத்தில் கால்சியம் அளவு 9-10 மில்லிகிராமாக இருக்கும். பால் அருந்தும்போது, ரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு திடீரென உயரும்.
எனவே அதனை வெளியேற்ற உடல் முயற்சி மேற்கொள்ளும் போது சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறும்.
அதாவது கால்சியத்தின் அளவை அதிகரிப்பதற்காக பால் அருந்துவது ஒட்டுமொத்த கால்சியத்தின் அளவையும் குறைக்கத் தொடங்குகிறது.
இதுதவிர எலும்புகளின் வலிமைக்காகவும் அதிக அளவில் பாலை அருந்துகின்றனர், ஆனால் உண்மையில் பாலை அதிகம் உற்பத்தி செய்யும் அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் தான் எலும்பு முறிவு மற்றும் எலும்பு மெலிதல் நோய் தாக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பெரும்பாலான மக்கள், தாகமாக இருக்கும்போதெல்லாம், நீரைப் போல பாலை அருந்துகின்றனர். இது தவறானது. பாலில் உள்ள புரோட்டீனில் 80 சதவீதம் அளவுக்கு புரதம் உள்ளது. இது வயிற்றுக்குள் சென்றதும், ஒன்றாக கலந்து செரிமானத்தை சிக்கலாக்குகிறது.
மேலும் கடைகளில் விற்கப்படும் பாலில், முக்கியத்துவம் வாய்ந்த நொதிகள் இல்லாததோடு, கொழுப்பில் மற்ற மூலக்கூறுகள் கலந்துவிடுகிறது.
அதிக வெப்பநிலையால், புரோட்டீன்களின் அளவு மாறிவிடுகிறது. எனவே, மிகவும் மோசமான உணவாக பால் திகழ்கிறது.
குறிப்பாக மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் ரசாயனங்கள் கலக்கப்பட்டு நீண்ட நாட்கள் பராமரித்து வைக்கப்படுகிறது.
இது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனை, குடல் பாதிப்பு, ஒவ்வாமை உட்பட நீரிழிவு நோயையும் உண்டாக்குகிறது.