மத்திய பிரதேசத்தில் பல் பிடுங்க வந்த நோயாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தோ மருத்துவர் சுனில் மாந்த்ரி (56).
இவருடைய மனைவி சுஷ்மா 2010-ம் ஆண்டு முதல் வீட்டிலேயே சிறிய துணிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். அதிக மருந்துகளை உட்கொண்டதன் காரணமாக சுஸ்மா கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து துணிக்கடையை நிர்வகிக்க பச்சோரி என்பவரின் மனைவியை வேலைக்கு சேர்த்துள்ளார். அடிக்கடி மருத்துவரின் வீட்டிற்கு சென்ற பச்சோரியின் மனைவி, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மருத்துவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதனை ஒரு முறை கையும்களவுமாக பிடித்த பச்சோரி, மருத்துவரை மிரட்ட ஆரம்பித்துள்ளான். இதில் பயந்து போன மருத்துவர் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக ரூ.16000 சம்பளம் கொடுத்து பச்சோரியை டிரைவராக வைத்துக்கொண்டார்.
ஆனால் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பச்சோரி, அடிக்கடி மருத்துவரை மிரட்டி அதிக பணம் பறித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இதை நினைத்து வேதனையடைந்த மருத்துவர், பச்சோரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி பல் வலிக்காக மருத்துவமனைக்கு வந்த பச்சோரிக்கு சிகிச்சை அளிப்பது போல நடித்து திடீரென கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அந்த உடலை என்ன செய்வதென தெரியாமல் ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே வைத்திருந்த மருத்துவர், செவ்வாய்க்கிழமை, துண்டதுண்டுகளாக நறுக்கி ஆசிட்டில் எரித்துள்ளார்.
இதற்கிடையில் மருத்துவர் நடவடிக்கையில் சந்தேகித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, வீடு முழுவதும் இரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே பாத்ரூம் சென்று பார்த்த போது, உள்ளே ஆசிட்டால் எரித்த நிலையில் கிடந்த பச்சோரியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பின்னர் மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் தீயாய் பரவியதை அடுத்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.