சாப்பிட்டு மீந்து போன இட்லியை வைத்து இனி உப்மா மட்டுமே செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. இட்லி போண்டாவும் செய்யலாம். வாருங்கள் எப்படி செய்வதென பார்ப்போம்.
இட்லி போண்டா செய்ய தேவையான பொருள்கள் :
கடலைமாவு – 4 மேஜைக்கரண்டி
இட்லி – 5
எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி
இட்லி போண்டா செய்முறை :
- வேகவைத்த இட்லியாக இருந்தால் நன்றாக ஆறிய பின்னர் உபயோகிக்கவும். இட்லியை நன்றாக பிசைந்து தூளாக வைத்து கொள்ளவும். பின் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி தூள்கள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
- நன்றாக இருபுறமும் வேகுமாறு திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான இட்லி போண்டா ரெடி!!