மீண்டும் வரும் அடுத்த உத்தரவு..? அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகிதப் பைகளை உபயோகப்படுத்துவதுமாறு புதுக்கோட்டை ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை 1.1.2019 முதல் அமலுக்கு வந்தது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது, அதில் பாலிப்புரப்லீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.பாலிஎத்தலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள்பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்குஅறிந்தனர்.

அதே சமயத்தில் நெய்யப்படாத கைப்பைகள், அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால் பொது மக்களால் துணிப்பை என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

மேலும் இவ்வகை நெய்யப் படாத பைகளின் கூறு பாலிப்புரப்லீன் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளே ஆகும்.இப்புத்தாண்டில், தமிழகம் தனது பயணத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகைநெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஆகையால் பொது மக்கள் இது போன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும்நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல்,துணி மற்றும் காகித பைகளை உபயோகித்து தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.