வெளிப்புற இதயத்துடன் பிறந்து ஆச்சர்யப்பட வைத்த குழந்தை!

பிரித்தானியாவில் இயற்கைக்கு மாறாக மார்பிற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை 14 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளது.

லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் நவம்பர் 22, 2017-ல், நவோமி ஃபிண்டேலே என்கிற பெண்னுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு வனெலொப் ஹோப் வில்கின்ஸ் என்கிற அழகிய குழந்தை பிறந்தது. ஆனால் அதில் பெரும் கவலை கொள்ளும் விதமாக, குழந்தையின் இதயம் மார்பு பகுதிக்கு மேல் அமைந்திருந்தது.

எக்டோபியா கோர்ட்டிஸ் உடன் பிறக்கும் இதுபோன்ற குழந்தைகள். பொதுவாக உயிர் பிழைப்பதற்கான 10 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு மட்டுமே உள்ளது என்பதால் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மூன்று அறுவை சிகிச்சைகள் தோல்வியில் முடிந்த பின்னர், நான்காவது அறுவை சிகிச்சையில் இதயம் உள்ளே வைத்து தைக்கப்பட்டது

அவசர பிரிவிற்கு மாற்றப்பட்ட வில்கின்ஸ் மீது, அவருடைய பெற்றோர் எப்பொழுது கவனமாகவே இருந்து வந்தனர்.

இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு, நோட்டிங்ஹாமின் குயின்ஸ் மருத்துவ மையத்தை விட்டு குழந்தையின் பெற்றோர் வெளியேறியுள்ளனர்.

பிரித்தானிய வரலாற்றிலே இதுபோன்று ஒரு குழந்தை உயிர் பிழைத்து, மருத்துவமனையிலிருந்து வெளியேறுவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்பு ஒரு சில நேரங்கள் மட்டுமே குழந்தை வீட்டிற்கு திரும்பியிருக்கிறது. ஆனால் இந்த முறை நிரந்தரமாக குழந்தை வீட்டில் தங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தாய் நவோமி கூறுகையில், “நாங்கள் இப்போது வீட்டில் குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பெரிய துயரத்திலிருந்து மீண்டிருப்பதை போல தோன்றுகிறது.”

குழந்தை வீட்டிற்கு வரவிருப்பதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது, ஆனால் அதே நேரத்தில் பயமாகவும் இருக்கிறது. இது நம்ப முடியாத ஒரு நீண்ட ஒரு உணர்ச்சி பயணம் என தெரிவித்துள்ளார்.