தந்தையை மரத்தில் கட்டிவைத்து மகளுக்கு 6 ஆண்களால் நடந்த கொடூரம்!

பீகார் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தை கண்முன்னே 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலம் கிஷான்காஞ் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இரவு நேரத்தில் 6 பேர் சேர்ந்து அப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளனர்.

அப்பெண் எடுத்துக்கொடுக்கையில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து அப்பெண்ணை சற்று தூரம் கடத்தி சென்றுள்ளனர். இதனை தட்டிக்கேட்க வந்த அப்பெண்ணின் தந்தையை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தந்தை கண்முன்னே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பெண் பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில், 6 பேரையும் தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.