இளைஞர்கள் பலருடன் பழக்கமானது எப்படி? சந்தியாவின் மறுபக்கம்

தூத்துக்குடி பெண்ணான சந்தியாவின் கொலை வழக்கில் நாளுக்கு நாள் புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சென்னையில் குப்பை மேட்டில் இளம்பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண் சந்தியா என்பதும், குற்றவாளி அவரது கணவரான பாலகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.

சந்தியாவை கொன்றதை ஒப்புக்கொண்ட பாலகிருஷ்ணன், தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

இந்நிலையில் சினிமா ஆசையுடன் சந்தியாவுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசையும் இருந்தது தெரியவந்துள்ளது.

தன்னை விட 16 வயது அதிகமான நபரை திருமணம் செய்த சந்தியா, 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

பாலகிருஷ்ணனுடன் திருமணம் முடிந்த பின்னர் தான் சந்தியாவின் நடவடிக்கைகள் மாறிப்போனதாம்.

பிரபல கட்சியின் தூத்துக்குடி நகர செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளராகவும் வளர்ந்தார்.

இதன்மூலம் சந்தியாவுக்கும் அரசியல் தொடர்பு ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் அரசியலில் ஜொலிக்க முடியாததால் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பாலகிருஷ்ணன்.

இருப்பினும் அரசியல் ஆசையால் கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்காக சுயேட்சையாக போட்டியுள்ளார் சந்தியா.

அப்போது மக்களை சந்தித்து பேசியதுடன் விசிட்டிங் கார்டையும் கொடுத்துள்ளார், இதன்மூலமே அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது பிடிக்காத பாலகிருஷ்ணன்ன அடிக்கடி சந்தியாவை கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தேர்தலில் தோற்றாலும் அரசியல் ஆசையுடனேயே சந்தியா இருந்ததாகவும் தெரிகிறது.