வேறு பெண்ணுடன் தொடர்பு… மனைவியை கொல்ல செய்த செயல்..

அமெரிக்காவில் வாழும் இந்தியர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்ய கூலிப்படை ஆளிடம் திட்டம் போட்டு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவின் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் நர்சன் லிங்கலா (55). இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளார்.

அங்கு கட்டிட வடிவமைப்பாளராக இருக்கும் லிங்கலா, பெண் ஒருவரை கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்த நிலையில், கடந்த 2011 மே மாதம் மனைவியிடம் விவாகரத்து கோரினார்.

மனைவியை அவர் கொடுமைப்படுத்தியதாக அப்போதே குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் சில காலமாக சந்தியா ரெட்டி என்ற பெண்ணுடன் லிங்கலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

லிங்கலா ஒரு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு மே மாதம் சிறையில் இருந்தபோது உடனிருந்த கைதியிடம் தனது முன்னாள் மனைவியை கொல்ல வேண்டும் எனவும், அதற்கு கூலிப்படை ஆட்கள் யாராவது தெரியுமா எனவும் கேட்டுள்ளார்.

இது குறித்து அந்த நபர் அதிகாரிகளிடம் கூறிய நிலையில், ஒரு அதிகாரி கூலிப்படை நபர் போல லிங்கலாவிடம் பேசினார்.

சிறையிலிருந்து வெளியில் வந்து அந்த நபரை லிங்கலா சந்தித்தார்.

பின்னர் அவரை கொல்ல $5,000 லிருந்து $10,000 பணம் கொடுக்கவேண்டும் என அந்த நபர் லிங்கலாவிடம் தெரிவித்தார்.

இதன்பின்னர் அடுத்த சந்திப்பில் சக அதிகாரிகளுடன் வந்து லிங்கலா மற்றும் சந்தியாவை அவர் கைது செய்தார்.

இருவர் மீதும் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் லிங்கலா மற்றும் சந்தியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள வரை சிறை தண்டனையும், $250,000 அபராதமும் விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.