அண்ணன் எடுத்த விபரீத முடிவு.! வெளியான அதிரவைக்கும் உண்மைகள்.!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்து வருகிறார். மேலும் செல்வராஜ், கிணறு அமைக்கும் பணிக்காக சென்றால் அவர் வீடு திரும்ப மாதக்கணக்கில் ஆகும். இவரது மனைவி தீபா.

தீபாவுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. மேலும் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த தீபா தனது குழந்தையுடன் அங்கேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் செல்வராஜின் தங்கை ராஜேஷ்வரிக்கு வருகிற 10-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மேலும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஆழ்துளை கிணறு அமைக்க சென்ற செல்வராஜ் வீடு திரும்பி தங்கையின் திருமணத்திற்காக, தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மனைவி தீபா மற்றும் குழந்தையை, தனது வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், தனது மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதற்கு தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை தூக்கி கொண்டு மற்றொரு அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டு வந்த நிலையில் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செல்வராஜின் தங்கை ராஜேஸ்வரியின் திருமணம் வருகிற 10-ந் தேதி நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.