கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் அதிகமாகப் பேசப்பட்ட பெயர் ராமலிங்கம் என்பதாகத்தான் இருக்கும். சாதி மதம் அரசியல் என அனைத்தையும் தாண்டி அனைவராலும் நீதி கேட்டு குரல் கொடுக்கப்பட்டது ராமலிங்கத்தின் படுகொலைக்கு தான். ஏனெனில் மதமாற்றம் செய்ய சென்ற இஸ்லாமியர்களை எதிர்த்து பேசிய ராமலிங்கம் அடுத்த பத்து மணி நேரத்திற்குள் படுகொலை செய்யப்பட்டதால் இது மதம் சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்தது.
கொலை நடந்த அன்று பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாவும் ராமலிங்கத்தின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க மற்ற அரசியல் கட்சிகளோ அமைதியாக இருந்தனர். இது சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அண்மையில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இந்து மதத்தினுடைய கல்யாண முறைகளை விமர்சித்து பேசியிருந்தார். அதே நேரத்தில் இஸ்லாமியர்களின் காவலனாக திமுக இருக்கும் என்று மற்றொரு நிகழ்வில் மு க ஸ்டாலின் பேசியிருந்தார்.
இது ராமலிங்கம் விஷயத்தில் திமுகவிற்கு எதிராக பலமாக திரும்பியது. மூன்று நாட்களாக மௌனம் காத்துவந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளின் கண்டனங்களுக்கு பிறகு இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் கட்சியாக தான் திமுக இருந்து வருகிறது என்பதும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தேர்தல் விரைவில் வருகிறது என்பதால் முதன்முறையாக ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் பலமாக வைக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் எதிரொலியாக மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் கணடனத்தை பதிவு செய்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அவர் பதிவு செய்த கணடன செய்தி,
“கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!
இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்” என திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) February 8, 2019