வேலியே பயிரை மேய்ந்த கதை: சீரழிந்த மாணவி!

கொசோவோ நாட்டில் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்க சென்ற மாணவியை மிரட்டி பொலிஸ் அதிகாரி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொசோவோ நாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் அந்த திருமணமான ஆசிரியருக்கு எதிராக குறித்த மாணவி புகார் அளிக்கும் பொருட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர், விசாரணைக்கு உதவும் என கூறி மாணவியை பல்வேறு கோணத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் குறித்த மாணவிக்கு தொல்லை அளித்து வந்துள்ளார் அந்த பொலிஸ் அதிகாரி.

மட்டுமின்றி ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்த பொலிஸ் அதிகாரியின் அழைப்பை ஏற்க மறுத்த மாணவியை,

பாலியல் தொழிலாளி என விளம்பரப்படுத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். மட்டுமின்றி நேரடியாக மாணவியின் குடியிருப்புக்கே சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த அதிகாரியுடன் செல்ல ஒப்புக்கொண்ட மாணவியை விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று அவருடன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி ஓராண்டு காலம் பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார் அந்த அதிகாரி.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி மாணவி கர்ப்பமான தகவல் வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைக்க வைத்துள்ளார்.

தமக்கு ஏற்பட்டுள்ள சம்பவங்களை பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வந்த மாணவி ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிலிருந்து மீண்ட அவர் இறுதியில் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து தமது நிலையை அவரிடம் விளக்கியுள்ளார்.

இந்த விவகாரம் பொலிஸ் வட்டாரத்தை உலுக்கிய நிலையில், கடந்த செவ்வாய் அன்று அந்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் கொசோவோ நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஜனாதிபதி ஹாஷிம் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மாணவிக்கு நீதி கிடைக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.