11 பவுண்டுக்கு மகளை வளர்ப்பு தந்தைக்கு விருந்தாக்கிய கொடூர தாயார்!

இந்தோனேசியாவில் மொபைல் மற்றும் பணம் தருவதாக கூறி சொந்த மகளை வளர்ப்பு தந்தையுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கொடூர தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நிர்பந்தம் காரணமாக தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் குறித்த 16 வயது இளம்பெண் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் மனமுடைந்த அவர் தனது நிலைமையை சொந்த தந்தையிடம் கண்ணீருடன் ஒப்புவித்துள்ளார்.

மகளின் பரிதாப நிலை கண்டு ஆத்திரமடைந்த தந்தை உடனடியாக பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

தகவல் அறிந்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் அந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், தங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரசியம் அதிகரிக்க செய்யவே மகளையும் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

வளர்ப்பு தந்தையே இந்த திட்டத்தை முதலில் தமது மனைவியிடம் கூறியதாகவும், அதை அவர் தமது மகளிடம் கூறி நிர்பந்தித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கு பிரதிபலனாக 11 பவுண்டுகள் பணமும் ஒரு மொபைல் போனும் வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபணமானால் மகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட வளர்ப்பு தந்தை மற்றும் தாயாருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த இளம்பெண், சிகிச்சை பெற்றுவருவதாகவும், குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் இதுபோன்ற பாலியல் துஸ்பிரயோகங்கள் பெருமளவில் அரங்கேறி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு மட்டும் இதுபோன்ற துஸ்பிரயோக வழக்குகள் சுமார் 1,210 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.