மட்டக்களப்பு – புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அப் பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டியே இன்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள உறவினரை பார்க்கச்சென்ற, இரண்டு பெண்களும் முச்சக்கர வண்டி சாரதியுமே உயிர் தப்பியுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுப்பாலத்தின் இரு பகுதியும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள காரணத்தால் பல விபத்துக்கள் அடிக்கடி இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.