ஏமன் நாட்டில் 12 வயதான சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலை செய்த இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏமன் நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் முகம்மது சாட் என்கிற 12 வயது சிறுவன், தன்னுடைய வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த வாதா ரெபாட் (28) மற்றும் முகம்மது கலீத் (31) என்கிற இரண்டு பேர், சிறுவனை தூக்கி சென்று வீட்டிற்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஆனால் அதன் பிறகு தொடர்ந்து சிறுவன் அழுதுகொண்டே இருந்ததால், உடனடியாக ஒரு கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏடன் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் இருவருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும், சிறுவன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 33 வயது பெண் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால், அவருக்கான தண்டனையை மட்டும் தற்போது தள்ளி வைத்திருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.