மாணவியுடன் காதல் வயப்பட்ட ஆசிரியர்: ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 41 வயதான John Teti என்ற ஆசிரியர் தன்னிடம் பயிலும் 16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியால் வசமாக சிக்கியுள்ளார்.

குறித்த மாணவியை மெக்டோனால்ட்ஸ் மற்றும் பல்வேறு பூங்காவிற்கு தனிமையில் அழைத்து சென்று ஆசை வார்தை கூறியுள்ளார்.

மேலும், அந்த மாணவிக்கு பிடித்தமான சிக்கன் போன்ற உணவுகளை வாங்கிகொடுத்துள்ளார். மேலும்,நாம் இருவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்வோம் என அந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

நாம் இருவரும் அனைத்து கோடைகாலத்தையும் ஒன்றாக கழிப்போம் மற்றும் சில தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.

இந்த குறுஞ்செய்தியை மாணவியின் தந்தை பார்த்ததையடுத்து அவர் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், மாணவிக்கும் தன் மீது காதல் இருந்தது என்றும் அந்த மாணவியின் சம்மதத்துடன் தான் நான் இவ்வாறு நடந்துகொண்டேன் என பொலிசில் விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர்.