வளர்த்த தாயுடன் அனுப்புங்கள்., நான் ஈன்றெடுத்த தாய்.! பாச போராட்டத்தில் பரிதவிக்கும் குழந்தை.!!

இலங்கை நாட்டில் இருக்கும் களுத்துறை மாவட்டத்தில் இருக்கும் ஆதரவற்ற பெண் ஒருவர் பிரசவ சமயத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்த முஸ்லீம் பெண் ஒருவர் உதவி செய்துள்ளார்.

அந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல பழக்கமானது ஏற்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்ணை தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற முஸ்லீம் பெண்., அந்த குழந்தையை முஸ்லீம் பெண் வளர்ந்து வந்துள்ளார்.

அந்த குழந்தையை வளர்த்த முஸ்லீம் பெண்., குழந்தையின் மீது கொண்ட பேரன்பால் குழந்தையை தாமே கவனித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்., தான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறவே., இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக சென்ற பெண் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதும்., குழந்தையை வளர்த்தவர் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

முஸ்லீம் பெண்ணின் இல்லத்தில் வைத்து அந்த பெண்ணை கவனித்து கொண்ட பெண்., குழந்தை பிறந்ததும் குழந்தையை வளர்த்துள்ளார். குழந்தையை பள்ளிக்கு அனுப்பி பயிலவைத்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., தன்னை வளர்த்த தாயாரிடம் செல்வதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில்., அவருடன் அனுப்ப பெற்ற தாய் அனுமதி மறுத்த காரணத்தால்., குழந்தையை சிறுவர் இல்லத்தில் சேர்க்க கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.