மணமகன் கூறிய ஒரு வார்த்தை.! விவாகரத்து செய்த மணமகள்.!!

குவைத் நாட்டில் திருமணம் முடிந்து மூன்று நிமிடத்தில் மணமகன் கூறிய ஒரேயொரு வார்த்தைக்காக மணமகள் விவாகரத்து வாங்கிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று நமது மூத்தவர்கள் க்கோரும் வார்த்தை. திருமணம் என்பது ஒரு சுபநிகழ்ச்சி, திருமணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், சமீப காலங்களில் இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் கூட பேருக்குதான் நடத்தப்படுகிறது. மகிழ்ச்சிகளும், சுகங்களும் இல்லை. பெண் பிள்ளைகள் சுமையாக பார்க்கப்படுகிறார்கள். வரதட்சணைக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இன்று ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டால், அந்த குடும்பம் கடனில் மூழ்கும் அளவிற்கு வரதட்சணை, ஆடம்பர செலவு என்று கணக்கில்லாமல் சென்று, அந்த குடும்பம் கடனில் தவிக்க ஆரம்பிக்கிறது.

இப்படி பல கழட்டங்களை பட்டு செய்து வைக்கப்படும் திருமணங்கள், தற்போதைய நவீன காலத்தில் குறட்டை விடுவதற்கெல்லாம் விவாகரத்து என்று நீதிபதி முன் நிற்கின்றனர். அப்படியான் ஒரு விவகாரமான விவாகரத்து குவைத் நாட்டில் நடந்துள்ளது.

அரபு நாடான குவைத் நாட்டில் தங்களின் திருமண பதிவை செய்ய, நீதிபதி முன் ஒரு ஜோடி காத்திருந்துள்ளனர். அப்போது திருமணப்பதிவிற்கான கோப்புகளை சரிபார்த்து திருமணத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நீதிபதி கூறியுள்ளார்.

இருவரும் கையெழுத்திட்ட அந்த நேரத்தில், மணமகளை மணமகன் முட்டாள் என்று கூறியதாக தெரிகிறது. தன்னைப் பார்த்து எப்படி முட்டாள் என்று கூறலாம் என கோவத்தின் உச்சாணிக் கொம்புக்கு சென்ற மணமகள், உடனடியாக அதே நீதிபதியிடம் இந்த திருமணம் வேண்டாம், என்றும் எங்களுக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தோம் சமாதானமாகாத மணப்பெண்ணுக்கு வேறு வழியின்றி விவாதத்துக்கு உண்டான ஏற்பாடுகளை நீதிபதி செய்துள்ளார். இந்த விவகாரத்து திருமணம் நடைபெற்று 3 நிமிடத்தில் அரங்கேறி உள்ளது.