தண்டராம்பட்டுக்கு அடுத்து உள்ள சு.வாழாவெட்டியை சேர்ந்தவர் ராஜீ இவரது மனைவி தீபா(27). இவர்களுக்கு மகன்கள் உள்ளனர். ராஜீவுக்கு மது பழக்கம் உள்ளதால், தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தீபாவிடம் சண்டை போடுவார்.
அதே போல் இன்றும் சண்டை போட்டு உள்ளார். இதனால் மனம் தளர்ந்த தீபா, வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்பு தீபாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டார்கள், அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுக்குறித்து வெறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.