திமுகவின் முன்னாள் MLA காலமானார்!! தொண்டர்கள் கண்ணீர் வெள்ளத்தில்!!

1969-ம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, புதுச்சேரியின் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் சீத்தா வேதநாயகம் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார்.

சிறிது காலமாகவே இவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், சீத்தா வேதநாயகம் இன்று மிகவும் உடல்நலம் குன்றி இறந்துள்ளார்.

இவரது உடலிற்கு திமுக தொண்டர்கள் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறப்பினால் அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருப்பதாக தெரிகிறது.