குற்றாலத்தில் திடீரென உலாவும் சிறுத்தைகள்.!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தென்காசியை அடுத்துள்ள குற்றாலம். இந்த பகுதியில் அருவிகள் அதிகளவில் உள்ளன.

மேலும்., கேரளாவிற்கு உள்ள பிரதான வழியில் இந்த குற்றாலம் அமைந்திருப்பதால்., தமிழகத்தில் இருக்கும் மக்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருக்கும் மக்களும் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில்., சீசன் நேரங்களில் அதிகளவில் மக்கள் கூடி அருவிகளில் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போடுவதும்., குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதும் வழக்கமான ஒன்று. இங்குள்ள ஏத்தங்காய் வாழைப்பழ சிப்ஸ் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம்.

இங்குள்ள பழைய குற்றாலம்., புலியருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் மக்கள் விடுமுறை தினங்கள் மற்றும் சீசன் நேரங்களில் அதிகளவில் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இங்கு சீசன் சமயங்களில் விற்பனை செய்யப்படும் பண்ணீர் கொய்யா பழங்களை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் வருவார்கள்.

இந்நிலையில்., குற்றாலம் மெயின் அருவிக்குட்பட்ட பகுதியில் அதிகாலையில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதாக திடீரென புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாக தொடங்கியது. இந்த சம்பவம் வெளியாகிய சிறு நேரத்திலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் தற்போது வரை எந்த விதமான விலங்குகளின் நடமாட்டமும் காணப்படாத நிலையில்., தற்போது சிறுத்தைகள் நடமாடுவதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.