ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும், அனைவரும் வீட்டில் இருப்பது மாலை மட்டும் தான். அப்பொழுது ஏதாவது ஸ்பெஷலாக சமைத்து உண்ண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு இதை முயற்சித்து பாருங்கள்.
போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
எண்ணெய் – பொரித்தெடுக்க
பெருங்காயம் சிறிதளவு
கடுகு – சிறிதளவு
பச்சரிசி – 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 3
புளி – சிறிதளவு
தேங்காய் துருவல் – கால் கப்
உப்பு – ருசிக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
போண்டா செய்முறை:
பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாயையும் சேர்த்து, ஊறவைக்கவும்.
இரண்டு மணி நேரங்கள் ஊறிய பின்னர், சிறிதளவு புளிக்கரைசல், தேங்காய் துருவல் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயை பயன்படுத்தி அதனுடன் கடுகு, சேர்த்து தாளித்து எடுத்து அரைத்து வைத்துள்ள மாவில் எடுத்து கொட்டி கிளறவும்.
பின்னர், கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மாவை குட்டி குட்டி உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமாக வந்தவுடன் எண்ணையை வடித்து எடுத்து சூடாக பரிமாறவும்.
சூடான பருப்பு போண்டா ரெடி!