புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசிலிய அரசு பிரதிநிதி, பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த போது ஆபாசமான உடை அணிந்திருந்ததால் அவருக்கு எதிராக பாலியல் மிரட்டல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
பிரேசில் நாட்டில் பாம்பின்காஸ் நகரின் முன்னாள் மேயராக பதவி வகித்தவர் அனா பவுலா டா சில்வா (43).
ஜனவரி மாதம் பிரேசில் தென்கிழக்கு கடற்கரையில் சாண்டா காடரின் சட்டமன்ற தேர்தலில் 50,000 க்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
பிப்ரவரி 1-ம் தேதி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பவுலா, சிகப்பு நிறத்தில் ஆபாசமான உடையினை அணிந்து வந்தார்.
அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அதிகமானவர்களால் பகிரப்பட்டது.
அதோடு சேர்ந்து 3000 கருத்துக்களும் பதிவிடப்பட்டன. அதில் ஒரு சிலர் பாராட்டியிருந்தாலும், பலரும் அவருடைய ஆடையினை குறை கூறியதுடன் பாலியல் மிரட்டல்களும் விட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் பவுலா, நான் என்னுடைய சிகப்பு ஆடையை தான் மக்கள் கவனிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை.
நான் எப்போதும் போல தான் இருக்கிறேன். உடை அணிவது என்னுடைய பிரச்சனை. சட்டமன்றத்தில் விவாதிக்க அதிக முக்கிய பிரச்சனைகள் உள்ளன. ஆனால் இப்படி நடந்திருப்பது எனக்கு வேதனையை அளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும், லத்தீன் அமெரிக்காவில் நீண்ட காலமாகவே பாலின வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. ஆண்கள் அரசியில் துவங்கி அனைத்திலுமே மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.