தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மங்கலஹாட் பகுதியை சார்ந்தவர் மகேஸ்வரி (வயது 32). இவர் ஹிரனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதியுற்று வந்தார். இவரது உடல் நலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.
இவருக்கு ஹைத்ராபாத்தில் இருக்கும் நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற மருத்துவமனைக்கு சென்று தனது உடல் நிலை குறித்து விளக்கி பரிசோதனை மேற்கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனை படி அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன் படி கடந்த டிசம்பர் மாதத்தில் 2 தேதியன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் நலம் தேறியதற்கு பின்னர் தனது இல்லத்திற்கு மீண்டும் திரும்பினார். வீட்டிற்கு திரும்பிய நாட்களில் இருந்து கடுமையான வயிற்று வழியால் அவதியடைந்து வந்துள்ளார்.
ஒரு சமயத்திற்கு மேல் கடுமையான வயிற்றுவலியால் அவதியடைந்த இவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் வயிற்றில் இருந்த பொருளை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். மகேஸ்வரியின் வயிற்றுக்குள் சுமார் முக்கால் அடி நீளமுள்ள கத்திரிக்கோலானது இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை மருத்துவ வட்டாரத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது. மேலும்., பிரதான மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் கத்தரிக்கோல் வயிற்றுக்குள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.