சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் விதவை பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற செய்தியாளர் ஒருவர் தீக்குச்சியை தட்டி விட்டு பெண்ணை காப்பாற்றினார்.
இதனை தொடர்ந்து பின்னால் வந்த காவலர், அப்பெண்ணை குற்றம் புரிந்தவரை போல இழுத்துச்சென்றார்.
அப்போது அந்த பெண், தனக்கு விற்கப்பட்ட வீட்டை பணத்தை வாங்கிக் கொண்ட வேறு நபருக்கு விற்று விட்டதாகவும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது சிரமமாக இருப்பதாகவும் தான் இறந்து விட்டால் அப்போதாவது தன் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமே என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொள்ளவதாகவும் அவர் கூறியுள்ளார்.