மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.
விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
திருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம்.
எனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.