சசிகலா வழக்கில் திடீர் திருப்பம்..? இடையில் திண்டாடடும் 18 கோடி..!

அந்நியச் செலாவணி மோசடிவழக்கில் ரூ 18 கோடி அபராதம் விதித்தது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சசிகலா தரப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரா னிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, அவரது உற வினர் பாஸ்கரன் ஆகியோருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு 18 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தில்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் சசிகலா தரப்பு மேல்முறையீடு செய்தது.

ஆனால் இந்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட் டது. இதைத்தொடர்ந்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சசிகலா தரப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.