போலீசை இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் கர்ப்பமான பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலத்தில், தாரணி (வயது 22) என்பவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று யாரும் எதிர்பாராத நிலையில், கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக கண்டறிந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் எதற்க்காக தற்கொலைக்கு முயன்றார் என விசாரித்ததில், சமீபத்தில் தான் தாரணிக்கு திருமணம் நடந்து அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் உடல்பாதிப்பு ஏற்பட்டதாக கூறி விடுப்பு எடுத்தவர் பின்னர், நான்கு நாட்கள் தனது விடுப்பை நீட்டித்துள்ளர். பின்னர் பணிக்கு திரும்பிய தாரணியிடம் ப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விடுப்புக்குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தாரணி அதற்கான காரணத்தை கூறி மருத்துவ சான்றிதழை காட்டியுள்ளார். தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து செல்வராஜ் கிண்டலடித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதனால், தாரணி மனா உளைச்சலுக்கு உள்ளாகி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வராஜிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

சில இடங்களில் இதுபோன்ற உயர்காவல் அதிகாரிகளின் அத்துமீறிய பேச்சினால் பல இளம் பெண் காவலர்கள் மனா உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதை கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்.

இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்காவலர்கள் சார்பில் கோரிக்கை வெகு நாட்களாகவே இருக்கின்றது.