ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் பகுதியை சார்ந்தவர் பிரியங்கா. அதே பகுதியை சார்ந்தவர் நவீன். இவர்கள் இருவரும் நட்பாக பழக தொடங்கி., தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விசயமானது இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அந்த பிரியங்காவின் குடும்பத்தினர் முதலில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்., காத்திருந்து இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அனுமதி பெற்றனர்.
இவர்கள் இருவரின் திருமணமும் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த நிலையில்., தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இல்லத்திற்கு வந்த பிரியங்காவின் தாயார் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கொண்டு அதிர்ச்சியடையவே., அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
மருத்துவமனையில் பிரியங்காவை சோதனை செய்த மருத்துவர்கள்., அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரின் குடும்பத்தினர் கதறியழுதனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த ப்ரியங்காவின் தாயார்., திருமணத்திற்கு முன்னர் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர் என்ற காரணத்தால் இவர்களது காதலுக்கு ஒப்புக்கொண்டோம்., திருமணத்திற்கு பின்னர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் எனது மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தனர்.
இதனை தெரிவித்து கடும் மன உளைச்சலில் இருந்து வந்த எனது மகள்., தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.