உப்பு – சிறிதளவு
முட்டை – 4
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – சிறிது
தேங்காய் துருவல் – அரை கப்
மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 1
பூண்டு – 6 பல்
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, தேங்காய் துருவல், வெங்காயம் போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.
பின் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை அவியல் ரெடி.