ஜெனீவா அருங்காட்சியகத்தின் புகைப்படத்தை தடை செய்த பேஸ்புக் நிர்வாகம்

ஜெனீவா அருங்காட்சியகத்தில் கலை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு புகைப்படத்தை ஆபாசம் என பேஸ்புக் நிர்வாகம் தடை செய்துள்ளது.

ஜெனீவா கலை அருங்காட்சியகம் கடந்த வெள்ளிக்கிழமையன்று “சீசர் அண்ட் தி ரோம்” கண்காட்சியை கண்காட்சியை திறந்து வைத்தது.

அதற்கு முன்னதாக கண்காட்சியில் உள்ள இரண்டு சிலைகளின் புகைப்படங்களை தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

ஆனால் அவை இரண்டும் ஆபாசமாக இருக்கிறது எனக்கூறி பேஸ்புக் நிர்வாகம் தடை செய்தது.

இதனை வேதனையுடன் பதிவிட்டிருக்கும் அருங்காட்சியக நிர்வாகம், கலை படைப்புகள் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வரும்போது பேஸ்புக் நிர்வாகம் ஆபாசம் சம்மந்தமான அதன் கொள்கைகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

ஆனால் இதுவரை பேஸ்புக் நிர்வாகம் அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.