தூத்துக்குடியில் மகன் தற்கொலை செய்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த அரசுஊழியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (57) அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகின்றார்.
இவருக்கு நவமணி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வேலை விட்டு வீடு திரும்பிய செந்தூர்பாண்டி, மனைவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் திடீரென அரிவாளை எடுத்து நவமணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
பின்னர் நேரடியாக காவல்நிலையம் சென்று மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் கொலைக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
வாக்குமூலத்தில், நாங்கள் வசிக்கும் வீடு, நவமணியின் சித்தி சீவிலி பெயரில் உள்ளது. அந்த வீட்டை கட்டுவதற்கு நானும் சிறிது பணம் போட்டுள்ளேன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சீவிலிக்கு திருமணம் நடைபெறவில்லை.
அவர் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். அதனால் இந்த வீட்டை உன்னுடைய பெயருக்கு மாற்றிவிடு என மனைவியிடம் கூறிவந்தேன். ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் வெட்டிக்கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு செந்தூர்பாண்டியன் மகன் இதே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.