முடி கடகடனு வளருமா?

நாம் முடி வளர இன்று வரை எவ்வளவோ பாடுபட்டு கொண்டு இருப்போம்.

இதற்காக ஓன்லைனின் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகள் மற்றும் இராசயான எண்ணெய்கள் என்று பல வித பொருட்களை முயற்சி செய்து பார்த்து இருப்போம். இதனால் முடி வளர்ச்சி பாதிப்படையுமே தவிர முடி வளர்ச்சியினை துண்டாது.

இதற்கு நாம் அன்றாடம் சமையலுக்கு சிவப்பு மிளகாய் முடி வளர்ச்சியினை துண்ட செய்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

இந்த கெயான் மிளகாய் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்டக் கூடியது.

இந்த சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைன் என்னும் ஒருவித வேதிப்பொருள் தான் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதோடு இது கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது .

தற்போது இந்த சிவப்பு மிளகாயை கொண்டு முடி வளர்ச்சியினை எப்படி அதிகரிக்க செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • 1 கப் ஆலிவ் ஆயில்
  • 5-6 மிளகாய்
பயன்படுத்தும் முறை

முதலில் சிவப்பு மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

சில நாட்கள் கழித்து எண்ணெயை மட்டும் வடிகட்டிவிட்டு மிளகாயை தனியாக எடுத்து தூக்கி எறிந்து விடுங்கள்.

இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.

பிறகு மென்மையான ஹெர்பல் சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் அபார வளர்ச்சி ஏற்படுவதை உங்கள் கண் கூடாக பார்க்கலாம்.