அல்சரை குணப்படுத்துவது எப்படி? இதை செய்திடுங்க…

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.

இதற்காக நாம் கண்ட கண்ட மருந்துகளை பாவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அல்சர் வந்துவிட்டால் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனம் குறைவாக விட்டு விட்டாள் அல்சர் மிகவும் அதிகமாகிவிடும்.

தற்போது அல்சரை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று பார்ப்போம்.

சாப்பிட வேண்டியவை
  • மணத்தக்காளி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவாக குணம் ஆகும். எனவே அந்த கீரையை சூப் செய்தோ இல்லை என்றால் பொரியல் செய்தோ வாரத்திற்கு மூன்று நான்கு தடவை சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகிவிடும்.
  • அல்சர் இருப்பவர்கள் தினமும் சோற்றில் தேங்காய்ப் பாலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் குணமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் கொப்பரைத் தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் அல்சர் குணமாகும்.
  • பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவாக வளர செய்து அது புண்களை ஆற்றிவிடும்.
  • தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் பழரசத்தை குடித்து வருவதன் மூலமும் அல்சரால் ஏற்படக்கூடிய உடல் வலியை தடுக்க முடியும்.
  • பாகற்காயை விட பாகற்பழம் அல்சருக்கு மிகவும் சிறந்தது இதை சமைத்து சாப்பிட்டால் வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் உடலும் குடலும் பலம் பெறும் மல பிரச்சினை எதுவும் இருக்காது.
  • வேப்ப இலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அரசர் மட்டும் இல்லாமல் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் வயிற்றிலுள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
  • அல்சர் உள்ளவர்கள் தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் விரைவில் அந்த நோய் குணமாகிவிடும்.
  • புழுங்கல் அரிசியில் சாதம் வடித்த கஞ்சியை வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்து வந்தாலே நல்ல குணம் கிடைக்கும்.
  • அல்சருக்கு அகத்திக்கீரை மிகவும் சிறந்தது ஒரு கப் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் சீக்கிரமாக குணமாகும் அகத்திக் கீரையைச் சூப்பாக வைத்தும் குடிக்கலாம்.
  • சிறப்பான ஒரு தீர்வு நெல்லிக்காய் ஜூஸில் தயிரை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • 50 மில்லி அத்திப்பட்டை சாரும் 50 மில்லி பசும் பாலும் சேர்த்து கலந்து அதில் கொஞ்சம் கற்கண்டு போட்டு இந்த 100 மில்லியை குடித்து வந்தால் வயிற்று புண் மற்றும் வாய் புண் அனைத்தும் குணமாகும். அத்தி இலையுடன் சம அளவு வேப்ப இலையை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தாலும் அல்சர் குணமாகும்.
சாப்பிட கூடாதவை
  • அல்சர் உள்ளவர்கள் காபியை அதிகமாக குடித்தால் அதில் உள்ள அமிலம் மேலும் நிலைமையை மோசமாக்கிவிடும். அதனால் அல்சர் உள்ளவர்கள் காபி, டீ, போன்ற பானங்களை தவிர்த்து விடுங்கள்.”
  • காரமான உணவுகள் அல்சர் பிரச்சனையை மிகவும் மோசமாகிவிடும். இரைப்பையில் எரிச்சலை உண்டாக்கி மிகவும் அவஸ்தைக்கு உள்ளாக்கிவிடும் ஆகவே அல்சர் குணமாக வேண்டும் என்றால் கார உணவை சாப்பிடவே கூடாது.
  • சுத்திகரிக்கப்பட்ட மாவால் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற பிரட்டை அல்சர் இருக்கும் பொழுது சாப்பிட்டால் அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும்.
  • மாட்டிறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இதை அல்சர் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் மேலும் நிலைமை மோசமாகிவிடும்.
  • அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹாலை அருந்தினால் அது செரிமான மண்டலத்தை பாதிக்கும் எனவே அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹால் அருந்துவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • அல்சர் உள்ளவர்கள் பால் பொருட்களை சாப்பிட்டால் அது வயிற்றில் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். மேலும் அல்சர் குணமாக வேண்டும் என்றால் பால் பொருளை சாப்பிடக்கூடாது.