அடுத்தடுத்து இடித்துக்கொண்ட 23 வாகனங்கள்.!! பலியான 13 உயிர்கள்.!!

இந்த உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எதோ ஒரு விபத்து தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டு., அதனால் பலர் பரிதாபமாக உயிரிழப்பதை செய்திகளின் மூலமாக நாம் அறிந்து கொண்டு இருக்கிறோம். அந்த வகையில்., விபத்துகளுக்கு விடுமுறைகள் கிடையாதா? என்ற கேள்வி பலருக்கும் அடிக்கடி எழுவது உண்டு. பல நல்ல நிகழ்ச்சிக்கு செல்லும் நேரத்திலும்., சாலையில் பயணிக்கும் போது எதோ ஒரு விபத்தை கண்டு கடந்துதான் செல்கிறோம்.

அந்த வகையில்., சீன நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டு தினத்தை சிறப்பிப்பதற்க்காக அங்குள்ள மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு தங்களின் வாகனங்கள் மூலமாக சென்று கொண்டு இருந்தனர்.

அங்குள்ள அன்ஹுயி மாகாணத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் சாலையில் அதிகளவில் பனி சூழ்ந்திருந்ததால்., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று சாலையோரத்தில் மோதியது.

இந்த வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து நிறுத்தவே., அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டன. சுமார் 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் சுமார் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போன்று அங்குள்ள குயிஸோவ் மாகாணத்தில் இருக்கும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்குள்ள சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது. மேலும்., வாகனத்தில் அனைவரும் மித வேகத்தில் சென்ற காரணத்தால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.