கொன்று ஆற்றில் வீசினார்கள்.. என்னால் தடுக்க முடியவில்லை: வெளிச்சத்துக்கு வந்த ஆணவக் கொலை

பிரித்தானியாவில் குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதாக கூறி இளம்பெண்ணை கணவரும் அவரது தாயாரும் கொன்று ஆற்றில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் கோவென்ட்ரி பகுதியில் பிறந்து வளர்ந்தவர் சுர்ஜித் அத்வால் என்ற பெண்மணி.

இவர் அதிக போதை மருந்து தரப்பட்டு பின்னர் சுயநினைவை இழந்த இவரை கணவரும் அவரது தாயாரும் இணைந்து கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் வீசியுள்ளனர்.

சுர்ஜித்தின் 16-வது வயதில் பெற்றோரின் சம்மதத்துடன் சுக்தேவ் அத்வால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

அன்று முதல் தமது 27-வது வயதில் கொல்லப்படுவது வரை சுர்ஜித் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் பகுதியில் அத்வால் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார்.

லண்டனில் சுங்க அதிகாரியாக பணியாற்றி வந்த சுர்ஜித் தமது நண்பர்களுடன் விடுமுறை நாட்களை கொண்டாடுவதில் தனி கவனம் செலுத்தியுள்ளார்.

ஆனால் பெண்கள் வேலைக்கு செல்வதே குடும்பத்திற்கு இழுக்கு என கூறி வந்துள்ளார் சுர்ஜித்தின் மாமியார் பச்சன் அத்வால்.

இதனால் சுர்ஜித்தின் நடவடிக்கைகளில் எப்போதுமே குறை காண்பதும், அதை தமது மகனிடம் கூறி பூதாகரமாக்குவதே வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார் பச்சன்.

மட்டுமின்றி போதைக்கு அடிமையான சுக்தேவ் தமது தாயாருக்கு பயந்து மனைவியை மதிப்பதில்லை என்பது மட்டுமல்ல, அவரை கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் சுக்தேவின் சகோதரரை சப்ஜித் என்பவர் திருமணம் செய்து கொண்டார். ஒருமுறை சப்ஜித்தை தனியாக அழைத்த பச்சன் அத்வால், தமது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுர்ஜித் தங்களது குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இச்சம்பவம் சப்ஜித்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை சுர்ஜித்தின் கணவரான சுக்தேவ் எந்த உணர்ச்சியும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தது கொடுமையானது என சப்ஜித் பின்னாளில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுர்ஜித் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும்போது அத்வால் குடும்பத்தினரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

இதுவரையான துன்பங்கள் தமது வாழ்க்கையில் போதும் எனவும், தமது பெற்றோருடம் எஞ்சிய காலத்தை வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சுக்தேவ் தனிக்குடித்தனம் செல்ல ஒப்புக்கொண்டு, வேறு குடியிருப்புக்கு மாறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் சுர்ஜித் மீது அவரது தாக்குதல் அதிகரித்துள்ளது.

மட்டுமின்றி விவாகரத்து கோரும் சுர்ஜித்தின் முன்னால் எந்த திட்டமும் பலிக்கவில்லை. இதனையடுத்து குடும்ப திருமணம் என்ற பெயரில் சுர்ஜித்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து கொலை செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சன் மற்றும் சுக்தேவ் ஆகிய இருவருக்கும் தலா 15 மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.