தரிசனத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிவனொளிபாதமலைக்கு சென்ற காலி கரந்தெனிய கெரேவவை சேர்ந்த 56 வயதுடைய கே.டி.மாலனி நேற்று 9ஆம் திகதியன்று மாலை சிவனொளிபாதமலை தரிசனம் செய்து கீழிரங்கியவர் சுகவீனம் கராணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மலையிலிருந்து கீழிறங்கிய போது சுகவீனம் அதிகமான நிலையில் குடும்பத்தினரின் உதவியுடன் நல்லத்தண்ணி பொலிஸார் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று 10 திகதியன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்துள்ளார்.