தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணமல் போன சிறுமி எலும்பு கூடாக மீட்கப்பட்டிருப்பதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் திகதி பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவேயில்லை. பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.
அதனருகில் பள்ளி சீருடை, புத்தகப்பை, தலைமுடி உள்ளிட்டவை புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் விரைந்து வந்த பொலிசார் அது யார் என்பது குறித்து சோதனை மேற்கொண்ட போது, 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிப்பதால்,
எலும்புகளை ஆய்வுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.