மூன்று தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இளம் பெண் பின்னர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.
கென்யாவை சேர்ந்தவர் பாத்துமா முகமது முசூல். இவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து முசூல் தான் வசித்து வந்த Siaya கவுண்டியில் இருந்து கிளம்பி Mombasa நகருக்கு சென்றார்.
இதையடுத்து கடந்த 2011-ல் Al-Shabaab தீவிரவாத இயக்கத்தில் இணைந்த முசூல், கசீம் ஒமாலா என்ற தீவிரவாதியை திருமணம் செய்தார்.
ஒருமுறை முசூல் வசித்த வீட்டுக்கு வந்த அவரின் சகோதரி, முசூலின் வாழ்க்கை முறையை பார்த்து கதறி அழுதார்.
காரணம், எந்நேரமும் தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற பயத்துடனேயே முசூல் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கசீம் – முசூல் வசித்த வந்த வீட்டில் பொலிசார் கடந்த 2013-ல் சோதனை செய்த போது நடந்த தாக்குதலில் கசீம் கொல்லப்பட்டார்.
இதன் பின்னர் முகமது ஷோஷி என்ற தீவிரவாதியுடன் முசூலுக்கு தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாம் திருமணம் செய்தார்.
இதையடுத்து கடந்த 2016-ல் ஷோஷி சுட்டு கொல்லப்பட்ட பின்னர் தனது நான்கு குழந்தைகளையும் அனாதையாக விட்டு, பரீத் அவர்த் என்ற தீவிரவாதியிடம் தஞ்சமடைந்தார் முசூல்.
கடந்த 2017-ல் பரீத் மற்றும் முசூல் ஆகிய இருவரையுமே பொலிசார் சுட்டு கொன்றனர்.
அவர்களின் சடலம் கென்யாவின் Naivasha நகரில் கண்டெடுக்கப்பட்டது.
முசூல் உயிரோடு இருக்கும் போது தேடப்படும் குற்றவாளி என பொலிஸ் அவரை அறிவித்தது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து மூன்று தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்ட முசூலின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இறுதிவரை இருந்தது.