நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடிக்க முடியாமல் போயுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றாலும், டி20 தொடரை 2-1 என்று தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் வரலாற்று சாதனையை முறியடிக்க முடியாமல் போயுள்ளது.
இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் தொடர்ந்து 10 டி20 தொடரைக் கைப்பற்றியிருந்தனர். இதனால் நியூசிலாந்து டி20 தொடரை இந்திய அணி வென்றால், 11 டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா என்ற வரலாற்று சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியால் அந்த வாய்ப்பை இந்திய அணியை கோட்டைவிட்டுவிட்டது என்று கூறலாம்.