இரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்.! பெண் எடுத்த அதிரடி…

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் பரேலில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். தினமும் இவர் தனது பணிக்கு இரயில் மூலம் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில்., நேற்று காலை 8.30 மணியளவில் அங்குள்ள சி.எஸ்.எம்.டி இரயில் நிலையத்தில் இருந்து இரயிலில் ஏறினார். பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் பெட்டியில் ஏறிய அவர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்த நேரத்தில்., இரயில் புறப்படும் நேரத்தில் ஆண் நபர் ஒருவர் வேகமாக ஏறினார்.

அந்த பெட்டியில் ஏறிய அவரை கண்ட பெண்., இந்த பெட்டி பெண்களுக்கான பெட்டி என்று கூறியும் அதனை கேட்காமல் அவர் அருகே வந்து அமர்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அடுத்த பெட்டிக்கு செல்ல நினைத்தார். அடுத்த இரயில் நிலையத்தில் அந்த இரயில் நிற்காது என்ற காரணத்தால் படியின் அருகே நின்று கொண்டு இருந்தார்.

அங்கிருந்த வாலிபர் அவரை பலாத்காரம் செய்யும் நோக்கில் அவர் அருகே நெருங்கவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இரயிலில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்து உயிருக்கு துடித்த இவரை மீட்ட இரயில்வே காவல் துறையினர்., மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் விஷயம் குறித்து கேட்டறிந்து., இரயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.