கோயம்பத்தூர் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அவ்வழியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து தனது பாதுகாப்பு வாகனத்தில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழக சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து தனது அரசு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் பக்கவாட்டில் சாலை விபத்தில் சிக்கி மரகதம் என்ற பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிக்சை செய்தர். தொடர்ந்து அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவி செய்தார். அமைச்சரின் செயலை பார்த்த அப்பகுதி மக்கள் அமைச்சரை மனம் குளிர்ந்து பாராட்டினர்.