விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் காக்கனூரை சார்ந்தவர் சண்முகம்., இவரது மகளின் பெயர் பவதாரணி (11). அதே பகுதியை சார்ந்தவர்கள் ஏழுமலையின் மகள்கள் கவுசல்யா (வயது 12) மற்றும் மணிமொழி (வயது 14). இவர்களில் பவதாரணி 6 ம் வகுப்பும்., கவுசல்யா 7 ம் வகுப்பும்., மணிமொழி 9 ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாளான நேற்று விடுமுறை என்ற காரணத்தால் தோழிகள் மூவரும் அங்குள்ள விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். கிணற்று படிக்கட்டில் அமர்ந்த மணிமொழி., கவுசல்யா., பவதாரணி ஆகியோர் துணிகளை துவைத்து கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் பவதாரணி கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கவுசல்யா மற்றும் மணிமொழி தோழியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதிக்கவே., மூவரும் நீரில் தத்தளித்தனர்.
இவர்களுடன் வந்திருந்த நித்யா என்ற 11 வயதுடைய சிறுமி., அதிர்ச்சியடைந்து பெற்றோர்களுக்கு விஷயத்தை தெரிவித்து கதறியளவே., உடனடியாக கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கிணற்றுக்கு விரைந்து மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.