கடைசி நிமிடத்தில் மணப்பெண் செய்த காரியம் ! ஆடிப்போன மணமகன்….

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் உடப்பன் குளத்தை சேர்ந்தவர்காளீஸ்வரன், இவருக்கும் தேனி மாவட்டம் சின்ன கூலாம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் திருமணம் செய்ய இருகுடும்பத்தாராலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர்கள் திருமணம் நேற்று சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலில் நடத்த பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் உறவினர்கள் அனைவரும் சூழ திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கான சடங்குகள் அனைத்தும் நிறைவுற்று தாலி கட்டும் நேரத்தில் சுவாமி சன்னதி முன்பு எதிர்பாராதவிதமாக சாமி ஆடுவது போன்று மணப்பெண் பாண்டியம்மாள் ஆடி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும், நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் பாண்டியம்மாள் கூறியுள்ளார். இதனை கேட்டு மணமகன் காளீஸ்வரன், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்

மேலும் பாண்டியம்மாளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டு அனைவரும் மிகுந்த சோகத்துடன் கோவிலை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.