புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சிஒன்றியம் கொன்னையம்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் அனைத்து கட்டிடங்களும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இது பற்றி பலமுறைபொதுமக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார்செய்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில் சமீபத்தில் வகுப்பறை நடைபெற்ற போது வகுப்பறையின் கூரை கான்கிரீட் உடைந்து விழுந்தது.
இதனால் இயங்கிக் கொண்டிருந்தமின்விசிறியும் விழுந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும்விமல்ராஜ் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்தார்.
மற்றொரு மாணவரும் காயம்அடைந்தார். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பெற்றோர் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
பள்ளி கட்டிடங்கள் மிகவும்சேதம் அடைந்து உள்ளன. இதுகுறித்து புகார் தெரிவித்தும் பயன் இல்லை.
தற்போது மாணவர்கள் உயிருக்கு ஆபத்து இன்றி அதிர்ஷ்டவசமாக படுகாயத்துடன் தப்பிஉள்ளனர்.
இனியாவது சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், பள்ளிகட்டடத்தை சீரமைத்து, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.